Skip to main content

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'


அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இ
ருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது. பா.ஜ., கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின், 14வது நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப சம்பள உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், ஊழியர்களின் பணித் திறனை அதிகரித்து, ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கவும், எதிர்காலத்தில், ஊழியர்களின் பணித் திறனைப் பொறுத்து, கூடுதல் மதிப்பூதியம் வழங்கவும் சம்பள கமிஷன் திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவான கவுன்சில் அமைத்து, ஊழியர்களின் ஊதியம் மற்றும் இதர படிகள் குறித்த பொதுவான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று நிதி ஆணையம் கூறியுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்