Skip to main content

காஸ் மானியத்தின் நிலை என்ன இணையதளத்தில் பார்க்கலாம்


ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடியாக காஸ் வினியோக மையத்திற்கு சென்று வங்கிக்கணக்கு நகலை கொடுத்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்திலும் சரிபார்க்கலாம்.

ஆதார் அட்டை உள்ளவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஆதார் நக
லை காண்பிக்க வேண்டும். அதன்பின் காஸ் வினியோக மையத்திற்கு சென்று பதிய வேண்டும். இரண்டு பதிவுகளும் முழுமையானால் உடனடியாக வங்கிக்கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.மதுரையில் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் இரண்டு இணைப்புகளும் முழுமை பெற்றதா என்பதை காஸ் இணைப்புக்கு பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணிலிருந்து *99*99# க்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். வங்கியில் தாமதமா அல்லது காஸ் வினியோக மையத்தில் தாமதமா என்பதை சரிபார்க்கலாம். இரண்டும் சரியாக இருந்தால் எந்த தேதி இணைப்பு முழுமையானது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு இரண்டு மாதங்கள் முன்பே மொபைல் போன் எண்ணுக்கு 17இலக்க காஸ் எண் அனுப்பப்பட்டுள்ளது. அந்த எண்ணை காஸ் வினியோக மையத்தில் காண்பித்து வங்கிக்கணக்கு நகலை ஒப்படைத்தால் உடனடியாக மானியத்திற்கு வரவு வைக்கப்படும்.வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும் அல்லது mylpg.in இணையதளத்தில் காஸ் எண்ணை பதிவு செய்யும் போது 17 இலக்க எண் குறிப்பிடப்படும். அதன்மூலம் மானியம் குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து முன்னோடி வங்கி அலுவலர் முருகபிரபு கூறியதாவது:மதுரையில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் மூலம் 6.5 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 7.2 சதவீத இணைப்புகள் ஆதார் அட்டை பெற்றுள்ளன. ஆதார் அட்டை பெற்றவர்களில் 54 சதவீதம் பேர் காஸ் வினியோக மையத்தில் பதிவு செய்துள்ளனர். 45 சதவீதம் பேர் வங்கியில் பதிவு செய்துள்ளனர். மீதி உள்ள 9 சதவீத பேருக்கு வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் நடந்து வருகின்றன, என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்