Skip to main content

புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள்

புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது
. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.

விடைத்தாளில் மாற்றம்:கடந்த பொதுத்தேர்வை விட இந்த ஆண்டு தேர்வில், விடைத்தாளில் சில மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. அதன்படி, மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடிட்ட விடைத்தாள்கள், வரைபடம் உள்ளிட்டவற்றை, விடைத்தாளுடன் சேர்த்து தைத்து வழங்குதல் ஆகியவை, புதிதாக அமல்படுத்தப்பட உள்ளன. தற்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட தேர்வுக்கு, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன், தேர்வரின் பெயர், பதிவெண், தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

* கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு, மார்ச் 13ம் தேதி நடக்கிறது. இதில், 75 வினாக்களுக்கு விடையளிக்க, ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கப்படும். 

* அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் அடங்கிய பாக்கெட்டை, அறிவிக்கும் தேதியில், முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.

* அதில், அனைத்து மாணவ, மாணவியருக்கான விடைத்தாள்கள் உள்ளனவா என்றும், அதன் விவரம் குறித்தும், எண்ணிக்கை சரியாக உள்ளதா எனவும், சேதமடையாமல் நல்ல நிலையில் உள்ளதா எனவும், சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

'ஷேடு' 

* சேதமடைந்திருந்தால், மாற்று விடைத்தாளை பெற்றுக் கொள்ளலாம். அதில் பதில் அளிக்கும் போது, கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா மூலமாக மட்டுமே, 'ஷேடு' செய்ய வேண்டும்.

* முதல், 75 நிமிடங்களில், அதாவது, 11:30 மணிக்குள், 75 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு