Skip to main content

மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்


மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை
மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல
வேண்டும் என்று பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மாணவர் சாவு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டபோது இறந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
* பள்ளிக்கூட மாணவர்-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த மாவட்டத்திற்கு சுற்றுலா செல்கிறார்களோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.
* மழை அல்லது கடும் வெயில் காலங்களில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.
* மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.
* மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டுனர் மது அருந்துபவராக இருக்கக்கூடாது.
* சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பெற்றோரிடம் கூறி அவர்களின் முழு சம்மதத்துடன் அனுமதி கடிதம் பெறுவது அவசியம்.
* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுற்றுலா செல்ல வேண்டும்.

நீர்நிலைக்கு ...

* நீர் நிலைகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.
* கூடிய மட்டும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல அனைத்து முன்ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் கவனிக்க வேண்டும்.
* இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி