Skip to main content

ஐஐடி வழங்கும் இணையதள குறுகிய கால சான்றிதழ் படிப்புகள்


பல்வேறு தலைப்புகளில் இணையதள குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி நடத்தி வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிதி உதவியுடன் நாடு முழுவதும் உள்ள 7 ஐஐடி-களும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும்
இணைந்து இந்த சான்றிதழ் படிப்பை "தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்' (என்.பி.டி.இ.எல்.) என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் திட்டத்தின் கீழ் கிளாசிகல் இயற்பியல், பொருளியல் தத்துவ வரலாறு, கணினி தொழில்நுட்பம் ஆகிய மூன்று தலைப்புகளில் இணையதள சான்றிதழ் படிப்புகள் இதுவரை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 2,800 மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
டேட்டாபேஸ் டிஸைன், எண் கணித நடைமுறைகள், எனர்ஜி சிஸ்டம்ஸ், குவான்ட்டம் இயற்பியல், அணு இயற்பியல், கணித இயற்பியல் என்பன உள்ளிட்ட மேலும் 14 தலைப்புகளின் கீழ் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்தப் படிப்புகள் அனைத்தையும் இலவசமாகப் படிக்க முடியும். தேர்வுக்கு மட்டும் சிறிதளவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி