Skip to main content

கல்விக்கு உகந்த காலை நேர காஸ்மிக் எனர்ஜி


இன்னும் சில வாரங்களில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு துவங்க உள்ளது. மாணவர்கள் இந்த தேர்வுக்கு எப்போதே தயாராகிவிட்டார்கள். ஆனால் அதிகாலையில் படி
ப்பதா இரவு முழுவதும் கண்விழித்து படிப்பதாக என்று பல்வேறு மாணவர்களிடையே ஒரு குழப்பம் நிலவுகிறது.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி 'இவ்வுலக இயக்கமே மனதின் அடிப்படையில் இயங்குகிறது என்கிற உன்னத கூற்றுத்தான்', மனித செயல் இயக்கத்திற்கும்; சாலப்பொருந்தும். எண்ண அலைகளின் வண்ணக்குவியல்தான் வாழ்க்கை வளம்பெற ஏதுவானதாக அமைந்துபோகிறது. மேல்நிலைக்கல்வியில் இரண்டாண்டு கற்றல் முறையில், முதலாமாண்டிற்கான வினாத்தாள் பகிர்ந்தாய்வு தன்மையில்தான் இரண்டாமாண்டிற்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாடத்திற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் சராசரி எண்ண உருமாற்றம், ஒரு சில மாணவனுக்கு இயற்பியல் ஆர்வம் அதிகமிருக்கும், வேறு சில மாணவனுக்கோ வேதியியலில் நாட்டம் கூடுதலாகிப்போகும். இந்த மாற்றுப்பதிவு நிலை மாற்றம் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது? இவைகூட 'மனதின்' அடிப்படையில்தான் அமையப்பெறுகிறது என்பதை உணர்ந்ததாக வேண்டிய நேரமிது.
எல்லோருக்கும் 'வெற்றி' என்கின்ற சூட்சம சொல்லின் ஆதிக்கம் அதிகமுண்டு. வெற்றிக்கான எதிர்சொல்லை எப்போதுமே நமது மனது எண்ணிப்பார்க்க முயலாது. ஆனால் அதுவன்று நமது நோக்கம். எச்செயல் ஆயினும் 'முயற்சி' என்கின்ற இந்த நான்கெழுத்து மந்திரச்சொல், 'வெற்றி' என்கின்ற இந்த மூன்றெழுத்துச் சொல்லை எப்போதுமே தன் வசமாக்கிக்கொள்ளும்.
தோல்விக்கான மனது என்று ஏதுமில்லை. எப்போதும் இருக்கும் மனது நம்மிடம் தான் உள்ளது. அந்த மனதை கூர்மை நோக்கோடு ஆனந்தமாக தேர்விற்காக நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும்! அதற்காகத்தான் 'கடினமாக' படிப்பைவிட 'கவனமாக' படித்தல் அவசியமாகிறது! சந்தோஷ தருணத்தில் நாம் ஆற்றும் செயல்களுக்கான 'முடிவும்' துக்க நேரத்தில் நாம் செய்யும் வேலைகளுக்கான 'திறன் முடிவும்' கூடுதலான வித்தியாசத்தை நமக்கு தந்து விட்டு போகும்.
காலை நேர காஸ்மிக் எனர்ஜி
வடலூர் வள்ளல்பெருமான் தனது அருட்பெருஞ்ஜோதி ஆன்மீகத்தேடலில் ஒளிக்கீற்றுப் படிவத்தன்மையை ஆராய்ந்து விளக்கியிருக்கின்றார். அதில் காலை நேர, அதாவது அதிகாலை நேர ஒளிப்படிவம் உலகம்நோக்கி காற்றில் கலந்துள்ள இயற்கை மூலிகைகள் பரவலாக பரவிச் செல்வது அக்காற்றை மனித சுவாசம் இழுத்துக்கொள்ளும்போது மனமும், உடலும் சராசரி சரிவிகிதத் தன்மையில் சக்தி மேல்நோக்கிச் செல்வதும் உண்மையென உணர்ந்தே சொல்லியிருக்கின்றார்.
இந்த காலை நேர காஸ்மிக் எனர்ஜியை கல்வியில் மனம் செய்திட ஏதுவான நேரமாக நாம் மாற்றி பயன்பெற இயலும் ஆதலால்தான் கர்மயோகிகளும், கல்வியாளர்களும் காலை நேரம் படிப்பிற்கு உகந்தது என கட்டாயப்படுத்தி இருக்கின்றார்கள். தேர்வு காலங்கள் அமையப் பெற்றிருக்கும் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இயல்பாகவே மனிதன் துயில் கொள்ளும் இக்காலக்கட்டத்தில் அதிகாலை தூக்கம் சற்று அழுத்தம் உள்ளதாகவே அமைந்துபோகின்றது. எளிதில் நம்மால் துயிலிலிருந்து எழுந்திருக்க இயலாது. இதையும் தாண்டி எழுந்த வண்ணம் உடற்சோம்பலால், அடுத்தகட்ட செயலில் உடன் செயலாற்றமுடியாது. மீளா தூக்கமே நம்மை வா! வா!! என்று வாழை இலைப்போட்டு அழைக்கும்.
ஆக இத்தருணத்தை எப்படி எதிர்கொண்டால் மனம் தயாராக மாற்ற முடியும்?
துயில் எழுந்த பின்னர் இரண்டு நிமிட மௌனத்துடன் கூடிய உட்கார்ந்த நிலை தியானம், (சற்று கண்களை மூடிய நிலையில் எண்ண ஓட்டத்தை நெற்றிப்பொட்டில் நிலை நிறுத்த பழகுதல்) பின்னர் மேலெழும்பி சற்று துள்ளி துள்ளி குதித்தல் (மிருதுவாக) அதன்பின் 200மில்லி தூய்மையான குடிநீர் குடித்தல் இறுதியாக கிழக்கு நோக்கி அமர்ந்து உடலை சீரான நேர்க்கோட்டில் இருக்குமாறு வைத்துக்கொண்டு சிறு மற்றும் பெரு வினாக்களுக்குரிய விடைகளை மனப்பாடம் செய்தல். இச்செயல் தொடர்ந்தார்போல் 1 மணி நேரம் காலை நேர காஸ்மிக் எனர்ஜியுடன் இனிவரும் தேர்வுகாலங்களில் மாணவர்கள் படித்து பயன்பெற எளிய வழியாக இருக்கும்.
தேர்வு கால உணவு
உணவே உடலாக..!, உணவே மருந்தாக! நமக்கு அமையப் பெற்றிருக்கின்றது. தேர்வுகாலத்திற்கு எளிய உணவு அதாவது எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை தேர்வு எழுதும் காலத்தில் உண்ணப் பழகுவதைவிட தேர்வு எழுதப்போகும் ஒருமாத காலத்திற்கு முன்னதாகவே நீராவியில் தயராகும் உணவுகளை அதாவது, இட்லி, இடியாப்பம் போன்ற எளிய உணவுகளை உண்பதை பழகிக்கொள்வோம். தேர்வுகாலங்களில் சராசரியாக 5 முதல் 6 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கத்தையும் நாம் தூங்கியாக வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.