Skip to main content

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்


                   
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியி
டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்பு
ஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது. அதற்கேற்ப இதில் அவ்வப்போது உயர்வு செய்யப்பட்டும் வருகிறது.
கடந்த ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஜூலை 10–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தினார்.


முதல் முழுமையான பட்ஜெட்
அது மட்டுமின்றி சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தினார். பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1½ லட்சமாக அதிகரித்தார். வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.

இந்த நிலையில், வரும் 28–ந் தேதி மத்திய நிதி மந்திரி 2015–16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்தான், பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரிவிலக்கு
அந்த வகையில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை தற்போதைய ரூ.2½ லட்சம் என்பதை ரூ.3 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிற எதிர்பார்ப்புகளை பொறுத்தமட்டில்–

* சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம், நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு உண்டு. எனவே அவர் இந்த பட்ஜெட்டிலும் 80–சி பிரிவின் கீழான சேமிப்புகளுக்கான வருமான வரி சலுகை வரம்பை தற்போதைய அளவான ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

* சுகாதார காப்பீடு பிரீமிய வகையில் வரி விலக்கு சலுகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

* பென்சன் திட்டத்தில் வரிச்சலுகைக்கு வாய்ப்பு.

* கார்ப்பரேட் நிறுவன துறையை பொறுத்தமட்டில், சர்ச்சைக்குரிய பொது தவிர்ப்பு தடுப்பு விதிகள் அமலாக்கத்தை ஒத்தி போடலாம்.

* முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வரிச்சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

* மறைமுக வரிப்பிரிவில், சரக்குகள் மற்றும் சேவை வரிகள் அமலாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதற்கு வரும் 28–ந் தேதி பதில் கிடைக்கும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா