Skip to main content

இன்று குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கமருந்து


மதுரை மாவட்டத்தில் 19 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை குடற்புழு நீக்க மருந்து அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரப்பிரிவு (பொது) துணை இயக்குநர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது: தேசிய குடற்புழு நீக்
க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 1 முதல் 19 வயது வரையிலுள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் எனும் மருந்து அளிக்கப்படும்.
குடற்புழுவானது சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்துதல், செருப்பின்றி அசுத்தமான இடங்களில் நடப்பவர், சுகாதாரமற்ற உணவுகளை உண்போருக்கு ஏற்படும் பாதிப்பாகும். குடற்புழு பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு ரத்தசோகை, உடல், மன வளர்ச்சி பாதிக்கும். கற்றல் திறன் குறையும். ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் இப்பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படும்.
ஆகவே குடற்புழு நீக்க நாளை தேசிய சுகாதாரத்துறையும், மாநில சுகாதாரத்துறையும் விரிவான வகையில் கடைப்பிடித்து குடற்புழு நீக்க மருந்தை குழந்தைகளுக்கு அளித்துவருகிறது.
மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குடற்புழு நீக்க மருந்து அளிக்கப்படுகிறது. சாப்பாட்டுக்கு பின்னர் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும். அதன்படி 5 லட்சத்து 88,600 குழந்தைகளுக்கு இம்மருந்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மருந்து அளிக்கப்படாத குழந்தைகளுக்கு 13-ம் தேதி பிற்பகலில் மருந்து அளிக்கப்படும் என கூறினார். கீழமாத்தூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மருந்து அளிக்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது எனக்கூறினார்.
மாநகராட்சிப் பகுதியில்
மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மாணவ, மாணவியருக்கு இன்று குடற்புழு நீக்க மருந்து வழங்க உள்ளதாக ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
அரசு அறிவித்துள்ளபடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் என 1 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மாநகராட்சி நலவாழ்வு மையங்கள் மூலம் குடற்புழு நீக்க மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படும்.
மாநகராட்சி நலவாழ்வு மையங்கள் மூலம் வழங்கப்படும் இந்த குடற்புழு நீக்க மருந்து மாத்திரைகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும். விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.11 முதல் பிப்.14 ஆம் தேதி வரை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்