Skip to main content

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழ
ங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் அனில் ஆர். தவே மற்றும் அமிர் தாவாரய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை முடியும்வரை காலிப்பணியிடங்களை நிரப்பக்கூடாது என மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி