Skip to main content

ஐ.சி.ஐ.சி.ஐ., யின் மொபைல் போன் வங்கி


மும்பையில் இளம் தலைமுறையினருக்கான மொபைல் போன் வங்கி சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நேற்று துவக்கியது.
'இ-வால்ட் பாக்கெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகமான இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை எளி
தில் மேற்கொள்ளலாம். மேலும் பேஸ்புக் மற்றும் வங்கி கணக்குகள் வைத்திருக்கும் நண்பர்களுக்கு இமெயில், மொபைல் போன் மூலம் அதிகபட்சமாக ரூ.?? ஆயிரம் வரை உடனடியாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
அதற்கு மேல் தேவைப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புதிதாக கணக்கு துவங்கியோ அல்லது ஏற்கெனவே உள்ள வங்கி கணக்கை இத்துடன் இணைத்து பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். ஆன்லைனில் விசா கார்டை பயன்படுத்தும் முறையில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இந்த வசதியை பெற விரும்புவோர் 'கூகுல் பிளே ஸ்டோருக்குள்' சென்று கணக்கு துவங்கி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 'ஜீரோ பேலன்ஸ்' வசதியும் உள்ளது. இதை துவக்கி வைத்து வங்கி தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் கூறுகையில்,''இன்றைய இளைஞர்களுக்கு போகிற போக்கில் அனைத்து விஷயங்களும் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மொபைல் போன் கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டைவைகளை எளிதில் செலுத்த இந்த 'பாக்கெட்' பயன்படும். எதிர்காலத்தில் டிஜிட்டல் முறை பணம் செலுத்தும் வசதி மேலும் நவீனமாக்க இது உதவும், என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி