Skip to main content

அரசுப் பள்ளிச் சுவர்களில் சித்திரங்கள் வரைய நிதி ஒதுக்கீடு


சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி  இயக்கம் சார்பில், 250 அரசு நடுநிலைப் பள்ளிச் சுவர்களில் கல்வி தொடர்பான வண்ணச் சித்திரங்கள் வரைய ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிவகங்கை மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி
அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) அ. வசந்தி கூறியது: மாணவர்களிடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல், குழந்தைகளின் இன்றைய கல்வி, நாளைய வாழ்க்கை என்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக பள்ளிச் சுவர்களில் வண்ணச் சுவர் சித்திரங்கள் வரைதல், இலவசக் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் வண்ணச் சுவர் சித்திரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன.  இதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 250 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும்
எஸ்.புதூர் உலகம்பட்டியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி ஆகியவற்றில், வண்ணச் சுவர் சித்திரங்கள் வரைய பள்ளி ஒன்றுக்கு ரூ.1600 வீதம் மொத்தம் 251 பள்ளிகளுக்கு ரூ. 4 லட்சத்து ஆயிரத்து 600 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி