Skip to main content

எளிய முறை ஆங்கில வாசிப்புத் திறன் பாடத் திட்டம்


ஆரணி அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பாடம் வாசிப்பு திறன் பாடத் திட்டம் திங்கள்கிழமை தொடக்கப்பட்டது.
பாடத் திட்டத்தை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன்
தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆங்கில எழுத்துக்கள் 26. இந்த எழுத்துக்களுக்கு 44 உச்சரிப்புகள் உள்ளன.
இந்த உச்சரிப்புகளை மாணவர்களுக்கு எளிய முறையில் பாடத் திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறோம். பாடத்தை நடத்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னர் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புகளை அறிந்து எளிய வழியில் படிக்க வாய்ப்புள்ளது.
இதனால் வெளிநாட்டவர்கள் பேசும் ஆங்கிலத்தை நம் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். இந்தப் பயிற்சியினை குறுந்தகடுகள் மூலம் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வாசிப்புத் திறன்
குறித்த புத்தகமும் வழங்கப்படுகிறது என்றார். பள்ளித் தலைமையாசிரியர் பி.மனோகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் காமாட்சி, ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி