Skip to main content

செவ்வாய் கிரகத்தில் பிறக்கப்போகும் முதல் குழந்தை

செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த ‘மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் கடந்த
2013 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ’ஒரு வழிப் பயணம்’ என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்கு திரும்ப இயலாது அதற்கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்யவில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப்பங்களை விநியோகித்தது.

 

2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும் இந்த பயணத்தினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 நபர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். 

இத்திட்டத்திற்கு, சுமார் 100 நபர்களை தெரிவு செய்துள்ளது. இதில், அமெரிக்காவிலிருந்து 39, ஐரோப்பாவிலிருந்து 31, ஆசியாவிலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானியாவிலிருந்து 7 நபர்களும் தேர்வாகியுள்ளனர். இந்த பயணப் பட்டியலில் 3 இந்தியர்களும் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த பயணத்திற்கு பிரித்தானியாவை சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu) என்ற பெண் தெரிவாகியுள்ளார். மேலும் இவர், செவ்வாய் கிரகத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளதாக வியப்பூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறும்போது, ”செவ்வாய்கிரகத்தில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமா இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன்” எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 நபர்கள் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டொலர்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்குபெறுபவர்கள் அனைவருக்கும் வருடக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர, இந்த பிரம்மாண்ட பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ்டோர்ப் கூறுகையில், ”உலகமே வியக்குமளவிற்கு இருக்க போகும் இந்த பயணத்தை நேரடியாக செவ்வாய் கிரகத்திலிருந்து ஒளிப்பரப்ப போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணையதள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்த பயணத்தை கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்