Skip to main content

உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'


மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்பட
வுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ௨௦௧௪ ஆக., ௩௧ன் படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும், சரியும் மாணவர்கள் எண்ணிக்கை, விதிமுறைகள் மீறி, 'நிர்வாக மாறுதல்' என்ற பெயரில் வழங்கப்படும் இடமாறுதல்கள் காரணமாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்தந்த ஆண்டு துவக்கத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்தினால், உபரி, பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும்' என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி