தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலையில் நடைபெறும் திறனறிவுப் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ஆம் தேதி கடைபிடி
க்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப இயக்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவை சார்பில், உடுமலை பூங்கா நகராட்சி விரிவாக்க நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 25-ஆம் தேதி திறனறிவுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அறிவியல் கண்காட்சி:
ஒவ்வொரு பிரிவிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு என ஒரு பள்ளிக்கு 6 படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். படைப்புகளை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு காட்சிக்கு வைக்க வேண்டும்.
போட்டிகளின் விவரம்:
பேச்சுப் போட்டி:
தலைப்பு: நீ விரும்பும் அறிவியல் அறிஞரும், அவரது கண்டுபிடிப்பும். (6,7,8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: அன்றாட வாழ்வில் அறிவியலின் தாக்கம்.
(9,10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: எனது பார்வையில் அறிவியல் (11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
ஓவியப் போட்டி:
தலைப்பு: தண்ணீர், தண்ணீர் (6,7,8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: வியத்தகு விண்வெளி (9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
தலைப்பு: அறிவியல் அற்புதம் (11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும்)
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள், கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இயக்கம், பி-7 வித்யாசாகர் வீதி, காந்தி நகர், உடுமலை-642154. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்: 99424-67764, 99656-44666, 89739-93331.