Skip to main content

பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வு

பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் சென்று படிப் பதற்காக எழுதப்படும் IELTS, TOEFL என்ற ஆங்கில தேர்வு களைப் போன்று பள்ளிப் பருவத் திலேயே மா
ணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்துகொள்ள இந்த தேர்வு உதவும்.
ஏப்டிஸ் தேர்வில் மாணவர் களின் பேசுதல், எழுதுதல், கேட்டல், வாசித்தல் திறன் சோதிக்கப்படும். கூடுதலாக ஆங்கில இலக்கணமும் சோதிக்கப்படுகிறது. இந்த தேர்வு நேற்று முன் தினம் (புதன்) டெல்லி யில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை யில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னையில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்களுக்கு இந்த தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியின் மாணவி ஆர்த்தி வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில் ஏப்டிஸ் தேர்வை அறிமுகப்படுத்தி பேசிய பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் மீ குவி பார்கர் (Mei Kwei Barker) கூறும்போது, “இந்த தேர்வு 13 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. அந்த பருவத்தில் உள்ள மாணவர்கள் என்னென்ன சூழ்நிலைகளை எதிர் கொள்வார்களோ அதிலிருந்து தான் கேள்விகளும் கேட்கப்படு கின்றன. விருப்பமுள்ள பள்ளிகள் பிரிட்டிஷ் கவுன்சிலிடமிருந்து இந்த தேர்வுக்கான பாடதிட் டத்தை பெற்றுக் கொள்ளலாம். பள்ளிகளில் இதனைப் பயன் படுத்தி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மதிப்பீடு செய்து கொள்ளலாம்” என்றார்.
சோதனை முறையில் இந்த தேர்வை எழுதிய மாணவி ஷைலஜா கூறும்போது, “பள்ளி யில் எழுதும் ஆங்கில தேர்வுகளை விட இது வித்தியாசமாக இருந்தது. மற்றவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், எனது ஆங்கில திறன் எந்த அளவில் உள்ளது என்பதை நானே அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது” என்றார்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்திய தேர்வுகள் துறைத் தலைவர் டி.விஜயலக்‌ஷ்மி, தேர்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்