Skip to main content

பிளஸ் 2 விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பு:குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ளது. தேர்வுகள் ந
டத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தேர்வுத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்கள், விடைத்தாள் மையங்கள், வினாத்தாள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஏற்பட்ட
தீ விபத்தில் விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின.இச்சம்பவத்தை அடுத்து விடைத்தாள் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளித்து அதை உறுதி செய்ய இணை இயக்குனர்களையும், கண்காணிப்பு பணி மேற்கொள்ள துணை செயலர் சுபோத் குமாரையும் நியமித்து கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கம்பி ஜன்னல் வசதியுள்ள மையங்களில் அதை சிமென்ட் மற்றும் செங்கலால் அடைக்கவும், மர பீரோக்கள் அல்லது தரையில் வைக்கப்பட்ட விடைத்தாள்களை ஸ்டீல் பீரோக்களில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தேர்வுத் துறை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மையங்களில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செயலாளர் உத்தரவு என்ற பெயரில் முந்தைய பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என இணை இயக்குனர்கள் கடைசி நேரத்தில் வலியுறுத்துவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உதவிபெறும் பள்ளிகள், வகுப்பறைகளை தான் மையங்களாக பயன்படுத்த தேர்வு காலத்தில் வழங்குகின்றன. அவர்கள் ஜன்னல்களை அடைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா