Skip to main content

அறிவியல் வானின் விடிவெள்ளி பிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன் தேசிய அறிவியல் தினம்.

இந்தியத் தி௫நாட்டில் இ௫ந்து முதன் முதலாக இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் சர். சி. வி. ராமன். 
இவர் 7.11.1888-ல் தி௫ச்சி மாவட்டம்தி௫வானைக் காவல் எனும்  ஊரில்
பிறந்தார். 
கடல் ஏன் நீலநிறமாக இ௫க்கிறது ? என்றும் ஒளிச்சிதறல் தான் அதற்கு
காரணம் எனவும் 1928- பிப்ரவரி 28-ல் விளக்கினார்.

அதுவே ராமன் விளைவு எனப்படும். 

அதற்காகவே பிப்ரவரி-28 தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது
ஒரு நிமிடம்... மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத இந்த உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள். அப்பா! என மலைப்பாக இருக்கிறதா? நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?

ஆம்! அறிவியல் இல்லா உலகம் அதிர்ச்சி தரும்.ஏனென்றால் உங்கள் நாகரீகத்தின் அடிப்படை அறிவியல் தான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல் நம்மோடு துணையாக பயணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அறிவியல் அறிஞர்கள்.  

தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர்

1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி மாங்குடி என்ற ஊரில் சந்திரசேகரய்யர், பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன். இளம் பருவத்திலேயே கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமையோடு விளங்கினார். இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார். அவருடைய 18 வயதில் அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

1917 முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்தார் ராமன். அப்போது தான் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. 1933 முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராகப் பணியாற்றினார்.

1943ம் ஆண்டு தமது பெயரில் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1948ல் அவர் தேசியப் பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும் அவரைத்தேடி வந்தன. 1954 ல் நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா‘ விருதும், 1957ல் ‘சர்வதேச லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன. உலகம் போற்றும் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமது 82வது வயதில் காலமானார்.

ராமன் விளைவு

1921ம் ஆண்டு, லண்டனில் உலகப் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது?

வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை  ஆராய்ந்தார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928ல் கண்டுபிடித்தார்.

ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் “ராமன் கோடுகள்” என்றும், அந்த விளைவு “ராமன் விளைவு” என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது.

ஒளிச்சிதறல் பற்றி அறிக்கை தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார்.

அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்று தன் படைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட அவர் நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன் மாதமே டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.

இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் அப்போதுதான்.  நோபல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம்‘ அறிவியல் துறையின் அடிப்படை. தேசிய அறிவியல் தினத்தில் சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல் சிந்தனைகளை வளர்த்து, புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப் பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

நம் வாழ்வை மாற்றிய சில கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்

* ஐசக் நீயூட்டன்-பூவியீர்ப்பு விசை(1687)

* தாமஸ் ஆல்வா எடிசன்- மின் விளக்கு(1879)

* மேரிகியூரி- ரேடியம்(1898)

* அலெக்ஸாண்டர் பிளம்மிங்- பென்சுலின்(1928)

* அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்- தொலைபேசி(1876)

* மார்டீன் கூப்பர்- மொபைல் தொலைபேசி (1973)

* ஜான் லோகி பெயர்டு-தொலைக்காட்சி(1926)

* ஜான் எண்டர்ஸ்- போலியோ தடுப்பூசி(1948)

* வானொலி- மார்க்கோனி(1895)

* ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள்-ரைட் சகோதரர்கள்(1903)

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா