Skip to main content

எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் செய்முறை தேர்வு 24-ந் தேதி முதல்4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது
                    
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில்
மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் அறிவியல் எழுத்து தேர்வுக்கு வழக்கம் போல 75 மதிப்பெண்களும், அக மதிப்பீட்டுக்கு 5 மதிப்பெண்ணும் ஆகும். செய்முறை தேர்வுக்கு 20 மதிப்பெண்கள்.


அறிவியல் செய்முறை தேர்வு 24-ந் தேதி முதல் மார்ச் மாதம் 4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மார்ச் 9-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிறகு மார்ச் 11-ந் தேதி முதல் 14-ந் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் செய்முறை தேர்வில் எந்த வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வுக்கு தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா