Skip to main content

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாணையில்தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகலை வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி
) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை 20ம் தேதி குரூப் 1 பணியில் அடங்கிய 79 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வை நடத்தியது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,389 விண்ணப்பதாரருக்கும் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ்களின் விவரம் மற்றும் தேர்வு கட்டணம் தொடர்பான குறிப்பாணை, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.மேலும் அக்குறிப்பாணை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு பதிவு எண்ணை உள்ளீடு செய்து குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ளசான்றிடப்பட்ட சான்றிதழ்களின் நகலை வரும் 17ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்