Skip to main content

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: பிப்.16, 17 இல் சான்றிதழ் சரிபார்ப்பு


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்
வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு 10-லிருந்து 12 குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவும் 25 பேரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி