Skip to main content

அறிவுத் திறனை வளர்க்கும் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும்


ஆசிரியர்களிடம் கேள்வியை எழுப்பி, அதன் மூலம் அறிவுத் திறனை வளர்க்கும் அடிப்படைக் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இயக்
குநர் விஞ்ஞானி பி.சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
விஐடியில் தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறை கண்காட்சிப் போட்டியை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், பல தலைமுறைகளுக்கு முன்பும் நாம் கண்டறிந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை முழுமையாக ஆவணப்படுத்தாமல் போனதாலும், பலவற்றை காப்பாற்ற முடியாமல் போனதாலும் பழம்
பெருமையை நாடு இழந்து நிற்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் பெற்றிட அடிப்படை அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார் சிவகுமார்.
விஐடி துணைத் தலைவர்
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியது:
பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பொறியியல் அகாதெமி கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை பள்ளிகளில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையாக செயல்படுத்துவதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் ஜி.வி.செல்வம்.
அறிவியல் போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்றனர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்