Skip to main content

பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது

பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது: நிர்வாகங்களுக்கு கல்வித்துறை உத்தரவு
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவி பெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவல
ர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்காக பள்ளிகளுக்கு ஜனவரி 15 முதல் 3 நாள்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அந்த விடுமுறை நாள்களிலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்க உள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகளின் சார்பில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரையாண்டுத் தேர்வு குறித்த மீளாய்வுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஞானகௌரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர், அரசு விடுமுறை நாள்களில் பள்ளிகளை இயக்குவது சட்ட விரோதமானது. எனவே பொங்கல் விடுமுறை மட்டுமின்றி எந்த ஒரு அரசு விடுமுறையின்போதும் பள்ளிகளை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். விதிகளை மீறி பள்ளிகள் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே, பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது என்ற சுற்றறிக்கையை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் கல்வித்துறை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்