Skip to main content

பாலிடெக்னிக் கல்லூரி காலிப் பணியிடம்: பதிவு மூப்பு சரிபார்க்க இன்றே கடைசி


திருவண்ணாமலையை அடுத்த நாகாப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 19 திறன்மிகு உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான பதிவு மூப்புப் பட்டியலை புதன்கிழமை (ஜனவ
ரி 28) மாலைக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.பேபி சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளதாவது: காலிப் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர், ஃபிட்டர், மெஷினிஸ்ட், ஏ.சி. மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் 
மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்), டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்), சர்வேயர், மெக்கானிக் (டீசல்), மெக்கானிக் (மோட்டார் வாகனம்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
2014 ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ. வகுப்பினர் 41 வயதுக்கு உள்பட்டவராகவும், எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் வகுப்பினர் 38 வயதுக்கு உள்பட்டவராகவும், ஓ.சி. வகுப்பினர் 36 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இந்தத் தகுதியுடைய பதிவுதாரர்களின் பெயர்கள் அடங்கிய பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பதிவுதாரர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகையில் உள்ள பதிவு மூப்புப் பட்டியலை புதன்கிழமை (ஜனவரி 28) மாலைக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பதிவு மூப்புப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அணுகிப் பயன்பெறலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்