Skip to main content

கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சல் அலுவலர் பணிகளுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையக் கோட்ட
க் கண்காணிப்பாளர் எழில் வெளியிட்ட செய்தி:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட சின்னப்புதூர், கிட்டாம்பாளையம், ஜெ.கிருஷ்ணாபுரம், மங்களகரைப்புதூர், திங்களூர் ஆகிய கிளை தபால் அலுவலகங்களில் கிளை அஞ்சலக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜெ.கிருஷ்ணாபுரம் பணியிடம் ஓ.பி.சி. பிரிவினருக்கும், மங்களகரைப்புதூர் பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற இடங்களுக்கு, அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தகுதி, நிபந்தனை, இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை கோட்டக் கண்காணிப்பு அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, கணினிப் பயிற்சி பெற்றவராகவும், 18 முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்