Skip to main content

நிலாவுக்கு ஒரு தனியார் ரேஸ் இந்திய அணியும் களத்தில்!

மனிதன் நிலாவில் காலடி வைத்து 40 வருடங்கள் ஓடிவிட்ட பிறகு, மீண்டும் சந்திரனுக்குச் செல்லும் பந்தயம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள லூனார் எக்ஸ் - பிரைஸ் என்ற மொத்தம்
30 மில்லியன் டாலர்கள் பரிசுகள் தான் இந்தப் போட்டிக்கு காரணம். இந்தப் போட்டியின் சவால் இதுதான். அரசு சாராத அமைப்பினர் நிலாவுக்கு ஏதாவது ஒரு சாதனத்தை ராக்கெட் மூலம் அனுப்பி, அந்தக் கலனை இறக்கி, நிலவின் மேற்பரப்பில் குறைந்தது 500 மீட்டர் பயணித்து, பூமிக்கு படங்களை அனுப்பவேண்டும். இந்தப் போட்டியில் தற்போது உலகெங்கும் பல நாடுகளைச் சேர்ந்த 18 அணிகள் கலந்துகொண்டிருக்கின்றன. மொத்தப் பரிசையும் ஒரே தடவையாகத் தராமல், அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக பிரித்துப் பிரித்து இப்போதே தருகிறது கூகுள். கடந்த வாரம், மைல் கல் சாதனை ஒன்றுக்காக கலிபோர்னியாவில் ஒரு விழா நடத்தி, போட்டியாளர்களுக்கு 5.25 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளை வழங்கியிருக்கிறது கூகுள்.
இந்த முறை மூன்று மைல்கல் பரிசுகளையும் அஸ்ட்ரோபாடிக் என்ற அமெரிக்க அணியே வென்றுவிட்டது. ஆய்வுக் கலனை நிலவில் இறக்குவதற்கு வித்தியாசமான யோசனையை கையாள்வதற்காக 1 மில்லியன் டாலர்களும், நிலாவின் பரப்பில் பயணிப்பதற்கான யோசனைக்காக 5 லட்சம் டாலர்களும், படங்கள் எடுத்து அனுப்புவதற்காக 2.5 லட்சம் டாலர்களும் வென்றிருக்கிறது அஸ்ட்ரோபாடிக்.

அதேசமயம், போட்டியில் இருக்கும் மற்ற அணியினரையும் தன் திட்டத்தில் சேர்த்திருப்பதற்காகவும், சராசரி பிரஜைகளும் பங்கேற்கும் திட்டத்தைப் பின்பற்றுவதற்காகவும் அஸ்ட்ரோபாடிக் பாராட்டைப் பெற்றது. நிலாவில் எத்தனை சக போட்டியாளர்களின் கலன்களைக் கொண்டு போய் இறக்கிவிட முடியுமோ அத்தனை கலன்களை சுமந்து சென்று, நிலாவில் கிரான்ட் ப்ரீ ரேஸ் போல, 500 மீட்டர் பந்தயம் நடத்துவது தான் எங்கள் கனவு என்கிறார் அஸ்ட்ரோபாடிக்கின் தலைவரான ஜான் தார்ன்டன். பிற்காலத்தில் பூமிக்கும், நிலாவுக்கும் மக்களை சுற்றுலா அழைத்துச் செல்வது, கூரியர் சர்வீஸ் நடத்துவது போன்றவையும் அஸ்ட்ரோபாடிக்கின் திட்டங்கள். 2007ல் அறிவிக்கப்பட்ட இந்த சவாலில், பங்கேற்பாளர்கள் 2016க்குள் நிலாவுக்குச் சென்றடையவேண்டும். போட்டியில் இருக்கும் இன்னொரு அணியின் பெயர் மூன் எக்ஸ்பிரஸ். இதுவும் நிலாவுக்கு பயண சேவை, ஒப்பந்த அடிப்படையில் மற்றவர்களுக்காக ஆராய்ச்சிகள் செய்து தருவது, நிலவில் உள்ள கனிமங்களை பூமிக்கு எடுத்து வந்து விற்பதும் மூன் எக்ஸ்பிரசின் திட்டங்கள்.
இந்தியாவிலிருந்து் இண்டஸ் என்ற அணி போட்டியிடுகிறது. இதில் மாணவர்கள், இந்திய விஞ்ஞானிகள் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் ஆதரவுடன் பங்கேற்கின்றனர். மிகக் குறைந்த செலவில் நிலாவுக்கு பயணம் செல்ல ஏற்பாடு செய்யும் அமைப்பாக வளர இண்டஸ் கனவு காண்கிறது என்கிறார் அதன் தலைவரான ராகுல் நாராயண். தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் முயற்சியில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது கூகுள் எக்ஸ் - பிரைஸ் பிரிவு.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்