Skip to main content

சமையலர், உதவியாளர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

சிறை சமையலர் மற்றும் அரிசி ஆலை உதவியாளர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ள சமையலர் காலி பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்
டும். எம்.பி.சி வகுப்பினர் 02.07.1997 வரை, மாற்றுத்திறனாளிகள் 12.07.1991 வரை, பரிந்துரைக்கப்பட உள்ளது. 01.07.2014 தேதியில் 32 வயதிற்குள் இருத்தல்
வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு கீழான தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பிற்கான வயது வரம்பு தளர்வு விதி பொருந்தும். 

சிவகங்கை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரால் மானாமதுரை நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பிட்டர், வெல்டர், ஜெனரல் மெக்கானிக் என்டிசி முடித்திருக்க வேண்டும். பி.சி முன்னுரிமை இல்லாதவர்கள் 12.12.2001 வரை, பகிரங்க போட்டியாளர் 13.11.2000 வரை பரிந்துரைக்கப்பட உள்ளனர். 01.01.2015 தேதியில் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் 35 வயது, பி.சி, எம்.பி.சி 32 வயது, பகிரங்கபோட்டியாளர் 30 வயதிற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். இப்பணிக்கு வயது வரம்பு தளர்வு விதி பொருந்தாது. 

மேற்கண்ட தகுதியுடையோர் அனைத்து கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் ஜன.19 அன்று சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா