Skip to main content

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்: மின் வாரியம் அறிவிப்பு
பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:

தமிழ்நாட்டில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2.30 கோடி மின் இணைப்புகளில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

இந்தப் புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை எவ்விதக் கட்டணமுமின்றி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை மாற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் மாற்றுவதற்கு யாரேனும் பணம் கேட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், யாரேனும் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா