Skip to main content

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு


கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி: எழுத்துத் தேர்வி
ல் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 27 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை, சென்னை TNPSC தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேற்கண்டவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள்,www.tnpsc.gov.in என்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கலந்தாய்விற்கான தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்கள், விரைவு தபால் மூலமாக, ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் பணி நியமனம் என்ற உத்தரவாதம் கிடையாது. காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே பணி நியமனம் நிகழும்.
இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு, வேறு மறுவாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.tnpsc.gov.in

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன