Skip to main content

"பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து பாடம் நடத்த ஏற்பாடு'


பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்கு
வரத்து துறை சார்பில் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கி அவர் மேலும் பேசியது:
நிகழாண்டில் சாலைப் பாதுகாப்பு வார விழா பாதுகாப்பு என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல, அது வாழ்வின் வழிமுறை என லட்சிய நோக்கத்துடன் எல்லோரும் கடைப்பிடித்திடும் வகையில் நடைபெறுகிறது.
வாகன நெருக்கடி மிகுந்த இந்த காலகட்டத்தில் சாலைப்பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். அப்போதுதான் விபத்துகளைத் தவிர்க்க முடியும். சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியப் பங்கு மாணவ சமுதாயத்திடம்தான் உள்ளது.
இன்றைய சூழலில் 18 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகள் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதை பெற்றோர் ஊக்குவிப்பது தவறு.
18 வயது பூர்த்தியாகி முறையாக லைசென்ஸ் பெற்ற பின்னர்தான் வாகனங்களை இயக்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து பள்ளிகளில் பாடமாக எடுக்க ஏற்பாடு செய்யப்படும். அனைவரும் சாலை விதிகளை மதித்துச் செயல்பட வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, கரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமரவேல், கொங்கு கல்விக் குழுமத் தலைவர் அட்லஸ்நாச்சிமுத்து, அரசுப் போக்குவரத்துக்கழக கரூர் மண்டல மேலாளர் சுப்ரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, சதாசிவம், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா