Skip to main content

அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்


பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம் வரும் 25-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்
குமார் கூறியதாவது: பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் மாநில அளவில்
முதலிடத்தைப் பிடிக்க மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வகுப்பறையில் மாணவ, மாணவிகளின் கற்கும் திறன்
அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் நடந்த அரையாண்டுத் தேர்வில் 2500 பேர் ஒரு பாடம் முதல் 5 பாடங்கள் வரை தோல்வி அடைந்துள்ளனர். இதுபோன்ற மெல்லக் கற்றல் மற்றும்
அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வரும் 25-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
     இது தொடர்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட இருக்கிறது.
தங்கள் பிள்ளைகளின் கல்வித் திறன் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர் கல்வியில் பெற்றோர்களின் பங்கு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட
இருக்கிறது. பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு 40 நாள்களே உள்ளதால், மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும். குறிப்பிட்ட பாடங்களையும்,
வினாத்தாள் புத்தகத்தையும் தொடர்ந்து படித்து பயிற்சி பெறவும் முகாமில் வலியுறுத்தப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா