Skip to main content

கோளரங்கத்தில் கணித மாதிரி வடிவமைப்பு போட்டி


திருச்சி, அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கணித மாதிரி வடிவமைப்புப் போட்டி ஜன. 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பாடத்திட்டம் சார்ந்த வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கு
ம் பள்ளி மாணவ, மாணவிகள், கணித சூத்திரம், கருத்து ஆகியவற்றை விளக்கும் வகையில் கணித மாதிரி வடிமைப்புகளை வழங்க வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை மற்றொரு பிரிவாகவும் கொண்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு பிரிவுக்கு ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஜன. 20-ம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431- 2332190, 2331921 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோளரங்க திட்ட இயக்குநர் இ.கி. லெனின் தமிழ்க்கோவன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்