Skip to main content

மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள்

பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள் அறிவிப்பு
                
பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான தகவல் மையத்தின்
தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


அமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வு கூட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 24–ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பன்றி காய்ச்சல் என்பது அந்தந்த பருவ காலங்களில் காணப்படும் குணப்படுத்தக்கூடிய சாதாரண புளூ காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அதன் தரத்தை தற்போது வகைப்படுத்தியுள்ளது. முன்புதான் அது கடுமையான நோய் என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தது.

சிறப்பு மையங்கள்
தற்போது பன்றி காய்ச்சலுக்கு (டாமி புளூ) என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் எளிதாக குணப்படுத்தலாம். தமிழக அரசு மருத்துவ நிலையங்களில் தேவையான அளவு டாமி புளூ மாத்திரைகள் (1.5 லட்சம்) தயார் நிலையில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சலை கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக, கிங் மருத்துவநிலையம் உள்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இதுதவிர 13 தனியார் ஆய்வு மையங்களுக்கும் இந்த காய்ச்சலை கண்டறிவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, தனியாக சிறப்பு வார்டுகள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்கள் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் (தொலைபேசி எண்.044 24350496, 044 24334811, 94443 40496 மற்றும் 93614 82899) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற 104 சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தடுக்கும் வழிகள்
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவவேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒருமுறை கைகளை கழுவவேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்து கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பீதி வேண்டாம்
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடையவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன