Skip to main content

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு


கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.


உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அ
ரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து கல்வி நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, தற்போது யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து, பல்கலைகளுக்கு எழுதி உள்ள கடிதம்:


* யு.ஜி.சி.,யால் அங்கீகாரம் பெற்ற, அனைத்து பல்கலைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது நிதி மேலாண்மை திட்டத்தில் (பி.எப்.எம்.எஸ்.,) பதிவு செய்வதுடன், மாணவர்களிடம் விண்ணப்பங்களை, வங்கி கணக்குடன் பெற்று, அவற்றை ஆன்-லைனில், பதிவு செய்ய வேண்டும்.


* அந்த விண்ணப்பங்களை, பி.எப்.எம்.எஸ்., இணையதளத்தில், காலதாமதமின்றி உடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் மீதான பாகுபாடு களையப்படும்.


* அனைத்து பல்கலைகளும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி