Skip to main content

புதிய உத்திகளைக் கையாளுங்கள்:ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்


புதிய வகுப்பறை உத்திகளை கையாளக் கூடிய ஆசிரியர்கள், தங்களது புதிய உத்திகளை பரவலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்துக்குள்பட்ட திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய
, நவீன
கற்றல் கற்பித்தல் கருவிகள், உபகரணங்கள், வெளி மாநில, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் முறைகள் செயல்பாடுகளை நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திய, பயன்படுத்தப் போகும் முறைகள், வகுப்பறைக்கு வெளியே கலை உடற்கல்வி சீரிய விழுமங்கள் பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகளை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பாக ஆசிரியர்கள் தங்களது உத்திகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ்ண்ய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஜனவரி 25-க்குள் பதிவு செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுமை வளங்கள் என்பது வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப
கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும்
வளங்களாகும். அவை கற்பித்தல் முறைகளாகவோ, துணைக் கருவிகளாகவோ, அணுகு முறைகளாகவோ இருக்கலாம்.
கணினி வளங்கள் என்பது கணினிகளைப் பயன்படுத்தி எளிய முறையில் மாணவர்களிடையே கற்றல்- கற்பித்தல் செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய அனைத்து செயல்பாடுகளும் ஆகும்.
உதாரணமாக, காணொலிக் காட்சிப் படங்கள், குறுந்தகடுகள் ஆகியன மூலம் கற்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ரமாபிரபாவை 9444453987 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்
பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்