Skip to main content

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு : விதிமுறைகள் வெளியீடு


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு : விதிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பட்டியலை தயா
ரிக்க மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியா ளர் தொகுதி) கருப்பசாமி வெளியிட்ட உத்தரவு:அரசு நகராட்சி உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களில் 1.1.2015 நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.

பட்டியல் தயார் செய் யும் போது பதவி உயர்வுக்கு 31.12.2014 வரை தகுதி பெற்றோர் விவரங்களை அனுப்ப வேண்டும். தமிழ் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு இடைநிலை, சிறப்பு ஆசிரியர் பதவியில் 30.6.99 வரை பணி வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே விவரம் அனுப்ப வேண்டும். பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை, பிஎட் பட்டச்சான்று வைத்திருக்க வேண்டும்.1.1.2012 அல்லது அதற்கு பின்னர் பட்டதாரி ஆசிரி யர் பதவி உயர்வை தற்காலிகமாக துறந்தவர்கள், ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் எந்தக் காரணத்தை கொண்டும் இடம் பெறக் கூடாது. நகராட்சி பள்ளிகளில் 1.6.1986க்கு முன்பு நகராட்சி ஆணையரால் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் இடை நிலை ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறக் கூடாது.

ஆச�ரியர் தேர்வு வாரி யம் மூலம் 1995ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் கள் சார்ந்த விவரங்களை அளிக்கும் போது, அவர்கள் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு, தர எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். ஒராண்டு முறையில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வுக்கு தகுதியில்லை என தெரிவித்துள்ளதால் அவ்வாறு பயின்றவர்களின் விவரங்கள் பட்டியலில் இடம் பெறக் கூடாது.இரண்டு ஆண்டு ஆசிரி யர் பயிற்சி சான்றை மேல் நிலைக் கல்விக்கு இணை யாகக் கருதி ஆணையிட்டுள்ளதால், அதன் படி தகுதி பெற்றவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் இடம்பெறு வர். எனவே தனி கவனம் செலுத்திஆசிரியர்களின் விவர பட்டியலை தயா ரித்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்