Skip to main content

முதுகலை பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு


விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விமானப்படை, நாட்டின் விண்வெளி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இந்த படைப்பிரிவில் குறிப்பிட்ட பயிற்சியின் கீழ் தகுதி
யான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது மெட்டராலஜி பிரிவுக்கு, 'கோர்ஸ் காமென்சிங்-ஜனவரி2016' பயிற்சியின் கீழ் தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன. பயிற்சியில் சேர்வதற்கான இதர தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது...


வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 1-1-2016 தேதியில் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1990 மற்றும் 1-1-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித்தகுதி:

கணிதவியல், புள்ளியியல், ஜியோகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஓசனோகிராபி, மெட்டராலஜி, அக்ரிகல்சரல் மெட்டராலஜி, ஈகாலஜி அன்ட் என்விரான்மென்ட், ஜியோபிசிக்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி போன்ற அறிவியல் முதுகலை படிப்புகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இளங்கலை பிரிவில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: 

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். 

பார்வைத்திறன், உடல், உள நலம் ஆகியவை விமானப்படைப் பிரிவிற்கு ஏற்ற அளவில் உள்ளதா என பரிசோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இருநிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். முதல் நிலையில் சான்றிதழ் சரிபார்த்தலும், இரண்டாம் நிலையில் உளவியல் தேர்வு, குழு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடைபெறும். இறுதியாக மருத்துவ பரிசோதனைக்குப் பின் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 52 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயார் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டுவதுடன், தேவையான சான்றிதழ் நகல்கள், 2 புகைப்படங்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சாதாரண தபால் முறையில் POST BAG NO.001, NIRMAN BHAWAN POST OFFICE, NEW DEL HI 110106  என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். 

விண்ணப்பங்கள் 14-2-15-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள்   www.careerairforce.nic.in   என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன