Skip to main content

ஹெபடைடிஸ் பி பாதிப்பு: அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம்'


ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என, கல்லீரல் மருத்துவ நிபுணர் ஜாய் வர்க்கீஸ் தெரிவித்தார்.
கல்லீரல் பாதிப்பு குறித்த மருத்துவ மாநாடு தொடக்க விழா சென்னை
யில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர் ஜாய் வர்க்கீஸ் கூறியது:
கல்லீரல் பாதிப்புக்கு குடிப்பழக்கம், கல்லீரலில் கொழுப்புப் படிதல், ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் உள்ளிட்டவை காரணமாகின்றன
.
இதில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே கல்லீரல் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள் தெரியவரும். ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் ரத்தம், உடலுறவு ஆகியவற்றின் மூலமாகப் பரவுகிறது.
மேலும் இந்த வைரஸ்கள் கருவுற்ற தாய்க்கு இருந்தால் அது பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைப் பிறந்த பின்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க தடுப்பு மருந்து உள்ளது. தற்போது இந்த தடுப்பு மருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
எனவே அவர்கள் ஹெபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் உள்ளதா எனப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இந்தப் பரிசோதனைக்கு கட்டணம் குறைவு, அதோடு இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க எல்லா வயதினரும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம்.
மேலும் இந்த வைரஸ் ரத்தக் காயங்கள் மூலம் பரவும் என்பதால் ஒருவர் பயன்படுத்திய சீப்பு, பிளேடு, பல்துலக்கி உள்ளிட்டவற்றை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.
கல்லீரல் பாதிப்பைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள், அதிக கொழுப்பு உள்ளவர்கள், மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்களை உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்