Skip to main content

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: சிறப்பு அஞ்சல் தலை இன்று வெளியீடு


இந்திய அஞ்சல் துறை சார்பில், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
ஹரியாணாவின் பானிபட்டில், சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் நரேந்தி
ர மோடி வெளியிடுகிறார்.
பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்கும் வகையில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம் மத்திய அரசால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இதை முன்னிட்டு, இந்தத் திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிடுகிறது. சென்னை, புதுச்சேரியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையங்களில் சிறப்பு அஞ்சல் தலை, தகவல் அட்டை, முதல் நாள் உறை போன்றவை விற்பனை செய்யப்படும்.
மேலும் அஞ்சல் கணக்கு தொடங்கி, சிறப்பு அஞ்சல் தலைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று கொள்ளும் வசதியும் நடைமுறையில் உள்ளது என அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்