Skip to main content

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் 450 கோடி ரூபாய்
செலவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்த மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இலக்கை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், விண்வெளிப் பயண வரலாற்றில் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலத்தை ஏவிய முதல் நாடு என்ற பெருமைக்குரிய சிறப்பிடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்த அரிய சாதனையை அங்கீகரித்து, கவுரவிக்கும் விதமாக 2015ம் ஆண்டின் விண்வெளி முன்னோடி விருதை இஸ்ரோவுக்கு வழங்குவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘என்.எஸ்.எஸ்.’ இன்று அறிவித்துள்ளது.

மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழுவினருக்கு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவின் கீழ் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ‘என்.எஸ்.எஸ்.’ செய்திக் குறிப்பு, வரும் மே மாதம் 20-24 தேதிகளில் கனடா தலைநகர் டோரான்ட்டோவில் நடைபெறும் 34-வது சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது இஸ்ரோவுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா