Skip to main content

பிப்.9-இல் பிரதேச ராணுவப் படைக்கு ஆள் தேர்வு


கோவையில் உள்ள 110-வது பிரதேச ராணுவப் படைக்கு பிப்ரவரி 9-ம் தேதி ஆள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் அரசு வேலை, சுய தொழில் செய்பவர்கள், தனியார்
நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், முன்னாள் தேசிய படை மாணவர்கள், துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 42 வயது வரையும், உயரம் 160 செ.மீட்டரும் அதற்கு மேலும், மார்பளவு 77 செ.மீட்டரும், எடை 50 கிலோ இருக்க வேண்டும்.
 கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் ஆள்தேர்வு முகாமில் கலந்து கொள்பவர்கள் மூன்று புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்