Skip to main content

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி


சென்னை: 'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.
ரவி விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014 பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர் என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன