Skip to main content

சாலை ஆய்வாளர் நிலை 2-க்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அலகு, பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளி
ல் சாலை ஆய்வாளர் நிலை-2 என்ற பதவிக்கு காலியாக உள்ள மூன்று பணியிடங்களுக்கு கீழ்கண்ட இன சுழற்சி, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய கல்வி தகுதிச் சான்று நகலுடன் பிப்ரவரி 10-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர்.
ஆதிதிராவிடர், ஆதரவற்ற விதவைகள் - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் - முன்னுரிமை பெற்றவர்களுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை - 1, பிற்படுத்தப்பட்டோர், பொது - முன்னுரிமைப் பெற்றவர்களுக்கான காலிப் பணியிட எண்ணிக்கை - 1 உள்பட மொத்தம்- 3 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ, சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது: 2014 ஜூலை 1--ஆம் தேதி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி