Skip to main content

ஐந்து மாதங்களில் 11.5 கோடி புது வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, சாதனை

ஐந்து மாதங்களில் 11.5 கோடி புது வங்கி கணக்குகள்: மத்திய அரசுக்கு சான்றிதழ் வழங்கியது கின்னஸ் நிறுவனம்
அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட, பிரதமரின், 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ், ஐந்து மாதங்களில், 11.5 கோ
டி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை பாராட்டி, 'கின்னஸ்' புத்தக நிறுவனம் மத்திய அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த சுதந்திர தினத்தின்போது, உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 'நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பெறும் வகையில், 'ஜன் தன் யோஜனா' திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், 2015, ஜனவரி, 26ம் தேதிக்குள், நாடு முழுவதும், 10 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தனியார் வங்கிகள்:இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிலும் 
கடந்தாண்டு ஆகஸ்ட்டில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. 'அரசின் மானியம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களின் பயன்களை, இந்த வங்கி கணக்குகள் மூலமாக மக்கள் பெறலாம்' என, அறிவிக்கப்பட்டதால், வங்கி கணக்கு துவங்குவதில் மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. இந்த சேமிப்பு கணக்கை துவங்குவற்கு, வைப்பு தொகை எதுவும் தேவையில்லை என்பதால், ஏராளமான மக்கள் போட்டி போட்டு, வங்கி கணக்குகளை துவங்கினர்.
இதையடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்கு முன்பாகவே, 10 கோடி என்ற இலக்கை கடந்து, ஐந்து மாதங்களில், 11.5 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, நேற்று கூறியதாவது:'ஜன் தன் யோஜனா' திட்டத்துக்கு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்கு முன்பே, இலக்கை கடந்து விட்டோம்.
நாடு முழுவதும், 11.5 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், 9,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன என்பது, மகிழ்ச்சி
தரும் தகவல். நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பெறுவது,பிரமிக்கதக்க சாதனை. அரசால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்கள், இந்த வங்கி கணக்கு மூலமாகவே செலுத்தப்படும்.

கிராமப்புறங்களில், 60 சதவீத வங்கி கணக்குகளும், நகரங்களில், 40 சதவீத கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் மூலமாக, ஒன்பது கோடி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி செலுத்தும் சாதனை திட்டமாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பிரசாரம்:மத்திய நிதித்துறை செயலர் ஹம்சக் அதியா கூறுகையில், ''நம்முடைய இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இந்த சேவையை மக்களுக்கு வழங்கியதற்காக, அந்த நிறுவனம், அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது,'' என்றார்.

இது தொடர்பாக, கின்னஸ் நிறுவனம் அளித்துள்ள சான்றிதழில்,'அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கும் பிரசாரம் துவங்கப்பட்ட முதல் வாரமான, கடந்தாண்டு, ஆகஸ்ட், 23லிருந்து, 29ம் தேதிக்குள் மட்டும், 1.8 கோடி பேருக்கு, இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது; இது, இந்திய அரசின் மிகப் பெரிய சாதனை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஜன் தன் யோஜனா':
*இந்த திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு துவங்குவதற்கு வைப்பு தொகை எதுவும் தேவையில்லை.
*வங்கி கணக்கு துவங்கும் ஒவ்வொருவரும், தலா, ஒரு லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெற முடியும். ஆயுள் காப்பீடு தொகை 30,000 ரூபாய்.
*கணக்கு துவங்கிய, ஆறு மாதங்களுக்கு பின், ஒவ்வொருவருக்கும், வரைவு தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்.
*இந்த தொகையை முறையாக திருப்பிச் செலுத்தினால், 15 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
*தனிப்பட்ட செலவுகளுக்காக கடன் பெற முடியாது; தொழில் சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பெற முடியும்.
*வங்கி கணக்கு எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இதன்மூலம், போலி முகவரி கொடுத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில், இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கி ஏமாற்ற முடியாது.
*இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மத்திய அரசு, 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்