Skip to main content

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு


10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி
கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.


மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகியப் பாடங்களை மாணவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் இந்த ஆய்வு நடத்தும் பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக்கான மாதிரி கேள்வித்தாள்களை தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்றல் அடைவுத் திறன் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள 10}ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல், கற்பித்தல் முறைகளில் தேவைப்பட்டால் மாறுதல்களைக் கொண்டுவரவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி