Skip to main content

ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: ஏர்டெல்!


ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்!

டுமையாக எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் முடிவை ஏர்டெல் நிறுவனம்
கைவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மற்றும்
கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது.

ஆனால், இந்த அதிர்ச்சி செய்தியை பலரும் எதிர்பார்க்கவில்லை. உலகெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எந்த விதமான
கட்டணமும் இல்லாமல் பேசும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாகத்தான் அமைந்தது.

ஏர்டெல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட இருந்த அந்த புதிய வாய்ஸ் கால் பேக் மூலம் 1MB ஒரு என 1ஜிபி டேட்டா, 3ஜி சேவையில் 4,000 ரூபாய் வரையிலும், 2ஜி சேவையில் 10,000 ரூபாய் வரையிலும் வசூலிக்க இருந்தது.

இதன்விளைவாக மக்கள் அனைவரும் அவரவர் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் #boycottairtel என்ற டேக்கில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்தனர்.
பலர் உண்மையாகவே ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணித்து வேறு நிறுவனங்களுக்கு தங்களது சிம்களை போர்ட் செய்தனர். இன்னும் சிலர் வாட்ஸ் அப் மூலம் "ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிப்போம்" என்று மெசேஜ்களை பார்வர்ட் செய்த வண்ணம் இருந்தனர்.



இது போன்ற பல பிரச்னைகளும், எதிர்ப்புகளும் கிளம்பியது. அதுமட்டுமன்றி நிறுவன ரீதியாகவும் ஏர்டெல் நிறுவனத்திற்கு பல நெருக்கடிகள் வரவே, மேற்கூறிய கட்டணம் வசூலிக்கும் முடிவை தற்போதைக்கு கைவிடுவதாகவும், இனி வழக்கம் போல் இணைய வாய்ஸ் அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

இந்த திடீர் செய்தி வெளியீட்டால் ஏர்டெல் எதிர்ப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அவர்களின் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி கொண்டாடி வருகின்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்