Skip to main content

ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு


தமிழ் உட்பட எந்தவொரு மொழியையும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, பார்லிமென்டில் நேற்று திட்டவட்டமாக, அமைச்சர் கூறினார்.

ராஜ்யசபாவில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., சுதர்சன
நாச்சியப்பன், 'தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என கொண்டு வந்த, தனிநபர் விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறியதாவது: மத்திய அரசின் ஆட்சி மொழியாக, இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. கூடுதலாக ஒரு மொழியை சேர்க்க வேண்டும் என்றால், அரசியல் அமைப்புச் சட்டத்தின், 346வது பிரிவை திருத்த வேண்டும். அதற்கு, பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும். எனவே, தமிழ் உட்பட எந்தவொரு மாநில, வட்டார மொழியையும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழகத்தை சேர்ந்த மற்றொரு எம்.பி., 'சென்னை உயர் நீதிமன்றத்தின், நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சவுத்ரி, ''இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் அமைப்பு அமர்வின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார். திருவள்ளுவர் பிறந்த தினத்தை, தேசிய மொழி நாளாக கொண்டாட வேண்டும் என்ற தமிழக எம்.பி.,க்களின் கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்தது. ''திருவள்ளுவர் பிறந்த தினத்திற்கு அந்த அந்தஸ்து கொடுத்தால், பல அறிஞர்களும் அந்த பெருமையை எதிர்பார்ப்பர். இதனால் குழப்பம் ஏற்படும்,'' என, அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்