Skip to main content

பள்ளிகளின் பழைய கட்டட விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு


மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், அச்சுறுத்தும் விதமாக உள்ள பழைய கட்டடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து அனுப்ப, கல்வி அலுவலகங்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை குறைக்கும்
நடவடிக்கையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் இறங்கியுள்ளது. அதற்காக, வரும் நிதியாண்டில், பள்ளிகளின் கட்டுமான தரத்தை மேம்படுத்தவும், புதிய கட்டடங்களை கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவியரை அச்சுறுத்தும் வகையில் உள்ள பழைய கட்டடங்களை கண்டறிந்து, தகவல்களை உடனடியாக அனுப்புமாறு, கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, அவற்றின் புகைப்படங்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடிக்கப்பட வேண்டிய குடிநீர்த் தொட்டி, வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிப்பறை, மூடப்படாத திறந்தவெளி கிணறு மற்றும் பள்ளிகள் அருகே உள்ள உயர் அழுத்த மின் மாற்றிகள் போன்றவை, மாணவ, மாணவியருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளவற்றின் பட்டியலை தயாரிக்கும் பணியில் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி