Skip to main content

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வில் கென்ய மாணவி


காந்திகிராம பல்கலையில் பயிலும் கென்யா ஆராய்ச்சி மாணவி கிராம மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
வளரும் நாடுகளில் திடக்கழிவுகளை அகற்றுவது பெரும் பிரச்னையாக
உள்ளது. திடக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை அகற்றுவது குறித்து கென்யா நாட்டின் கிசி பகுதியை சேர்ந்த இ.எஸ்தர், 23, காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். ஓய்வு நேரங்களில் திண்டுக்கல் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சேலத்தில் பி.எஸ்.சி., பயோடெக்னாஜி பட்டப் படிப்பும், திருச்செங்கோட்டில் எம்.எஸ்.சி., யும் படித்துள்ளார். அவர் கூறியதாவது: கென்யா மற்றும் இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆராய்ச்சி செய்துவருகிறேன். எங்கள் நாட்டை விட இந்தியாவில்அதிகமாக குப்பை சேகரமாகிறது.
இங்குள்ள மக்கள் தங்கள் வளாகத்தை மட்டும் சுத்தகமாக வைத்து கொள்ள நினைக்கின்றனர். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் வளாகத்திற்கு வெளியே குப்பையை கொட்டுகின்றனர். உள்ளாட்சி அமைப்பினர் குப்பை அகற்றுவத்தில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். மேலும் அவற்றை ஒரே இடத்தில் கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நிலத்தடிநீர் மட்டமும் குறைகிறது; தொற்றுநோய் பரவுகிறது.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் விஷயமாக குப்பையை கருதாமல் சாதாரண விஷயமாக பொதுமக்கள் நினைக்கின்றனர். அரசு நிர்வாகமும் திடக்கழிவு அகற்றுவதில் மெத்தனம் காட்டுகிறது. இது வருங்கால சந்ததியினரை பாதிக்கும். எங்கள் நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பையை தனித்தனியாக பிரித்து அகற்றுவது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார்.
மாணவர்களின் மனோபாவம்: காந்திகிராம பல்கலை உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மாணவர்கள் டீ குடித்து விட்டு கப்புகளை வெளியே வீசினர். அவற்றை ஒவ்வொன்றாக பொறுக்கி அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டேன்.
மாணவர்கள் எந்த வித சலனமும் இல்லாமல் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கூட எழும்பி வந்து தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து கப்பை எடுத்து குப்பையில் போட முன்வரவில்லை. அவர்களின் அலட்சியமான மனோபாவம் என் மனதில் வேதனையை ஏற்படுத்தியது. திடக்கழிவு மேலாண்மை குறித்து முதலில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், என்று வேதனையோடு மாணவி எஸ்தர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா