Skip to main content

8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு: ஜன.3க்கு ஒத்திவைப்பு


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு  வருகிறது. இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு அனைத்து வட்டாரங்களில் தேர்வு  மையங்கள் அமைக்கப்படுகிறது
. அதன்படி 2014-2015ம் கல்வியாண்டில் தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று அரசு தேர்வு  இயக்ககம் அறிவித்திருந்தது. ஆனால் இத்தேர்வு ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறுகையில், 2013-2014ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பில் 50 சதவீதம் முதல் 55  சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேசிய திறனாய்வு தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும் இத்தேர்வு வரும் 27ம் தேதி  நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தற்போது அது தள்ளி வைக்கப்பட்டு வரும் ஜனவரி 3ம் தேதி நடக்க உள்ளது என்று அரசு தேர்வு இயக்ககம்  உத்தரவிட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி